2019ம் ஆண்டை ஊழல் இல்லாது பணியாற்றும் ஆண்டாக தாம் பெயரிட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

Share Button

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று இன்று வழிபாடுகளில் ஈடுபட்டார். மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவாவ ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து சுக துக்கங்களை கேட்டறிந்தார்.

மஹாநாயக்கர் தேரர் பிரித் பாராணயம் செய்து ஜனாதிபதிக்கு புத்தாண்டுக்கான ஆசிர்வாதங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய தேதர் வேடருவே உபாலி தேரரையும் சந்தித்தார்.

அனுநாயக்க தேரரும் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஊழல் இல்லாமல் பணியாற்றும் ஆண்டாக அடுத்த வருடத்தை தாம் பிரகடனம் செய்துள்ளதாக கூறினார். மனச்சாட்சிக்கு அமைவாக நேர்மையான முறையில் நாட்டை கட்டியெழுப்பும் சவாலை வெற்றி கொள்ள அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரம்மன்ய நிக்காயவின் மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய நாபான பேமசிறி தேரரை சந்தித்த ஜனாதிபதி தேரரின் துக துக்கங்களையும் கேட்டறிந்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *