கொழும்பு கோட்டையிலிருந்து மாலபே வரை உள்ள பகுதியில் இலகுரயில் சேவையொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Share Button

கொழும்பு கோட்டையிலிருந்து மாலபே வரை உள்ள பகுதியில் இலகுரயில் சேவையொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆயிரத்து 850 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளதாக நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் தொகையை 2018 முதல் 2024 வரை உள்ள காலப்பகுதியில் ஆறு கட்டங்களில் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதன் முதற் கட்டத்தின் கீழ், 260 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது. இந்தக் கடன் தொகைக்கான வட்டி மிகக் குறைந்தளவில் பேணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சைபர் தசம் ஒரு வீத வட்டி அறவிடப்படுகிறது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு இந்த செயல்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11