சம்புத்த ஜயந்தி திரிபீடக, தேசிய உரிமை சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன

Share Button

சம்புத்த ஜயந்தி திரிபீடக, தேசிய உரிமை சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று புத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.பி.ஜி.கித்சிறி தெரிவித்தார். மஹா சங்கத்தினர் மற்றும் மஹாநாயக்கர்கள் உட்பட ஆயிரத்து 500 மஹாசங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். இதனை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள பௌத்த விஹாரைகளில் விசேட பூஜைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

திரிபீடகவை தேசிய உரிமச் சொத்தாக பிரகடனப்படுத்துவதன் அவசியம் குறித்து, மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இதனை அடுத்து, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். இந்த தேசிய உரிமை சொத்தின் பராமரிப்பை மேலும் பலப்படுத்துவதற்கு விசேட சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். திரிபீடக தேசிய உரிமச் சொத்தாக பிரகடனப்படுத்தப்படும் தேசிய விழா நாளைய தினம் மாத்தளை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அலுவிஹார வளாகத்தில் இடம்பெறும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11