இடர்களால் பாதிக்கப்படும் சகலருக்கும் இடர்காப்புறுதித் திட்டம் – அமைச்சர் தலதா அத்துக்கொறள தெரிவித்துள்ளார்

Share Button

இலங்கையில் இடர்களால் பாதிக்கப்படும் சகலருக்கும் உதவும் வகையில் இடர்காப்புறுதித் திட்டம் அமுலாவதாக அமைச்சர் தலதா அத்துக்கொறள தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கையின் சகல பிரஜைகளும் இடர்காப்புறுதித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணங்களையும் உபகரணங்களையும் கையளிக்கும் நிகழ்ச்சி அவர் உரையாற்றினார்.

சமீபத்தய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் ஆரம்ப கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டள்ளது. உரிய மதிப்பீடுகளை மேற்கொண்ட பின்னர் இழப்பீடுகள் வழங்கப்படும். ஏனைய நிவாரணங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி பரிசீலித்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *