வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடருகின்றன

Share Button

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளத்தால் வட மாகாணத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. 474 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. நான்காயிரத்து 522 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இந்த பாதிப்புக்கள் தொடர்பான முழுமையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன. அதுவரையில் வீட்டு உரிமையாளர்களுக்காக பத்தாயிரம் ரூபா முற்கொடுப்பனவு வழங்குவதற்குத் தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையில் அவர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு உலர் உணவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாய பயிர்ச் செய்கைகளுக்கும், கால்நடைகளுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *