உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயன்று வருவதாக குற்றச்சாட்டு

Share Button

உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயன்று வருவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சாடியுள்ளார்.

பொலநறுவை பிரதேசத்தில் பூர்த்தி செய்யப்பட்ட ஐந்து அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்ற பொழுது அதில் உரையாற்றிய வேளையில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நகரை அலங்கரிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பொழுது நகரின் மத்திய பகுதியை மட்டும் கவனத்தில் கொள்வது உகந்த விடயமல்ல என்று அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். நகர் முழுவதும் சம அளவிலான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோன்று நகரை சுற்றியுள்ள பிரதேசங்களும் விருத்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொலநறுவை பிரதேசம் ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்படும் பிரதேசமாகும். திட்டமிடாத வகையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் இதற்கு மூல காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் விரிவான ஆய்வுகளுடன் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *