அறநெறிக் கல்வியை வலுப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிப்பு

Share Button

அறநெறிக் கல்வியை வலுப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கலாசார அமைச்சர் என்ற வகையில் தான் நடைமுறைப்படுத்தும் முதல் வேலைத்திட்டமாக அது அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்ட சீதாராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வின்போதே அமைச்சர் தெரிவித்துள்ளார். சீதாராம விகாரையில் அமைக்கப்பட்டுள்ள அறநெறிப் பாடசாலைக்கான கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

அந்தக் கட்டடத்திற்கான நிதி அனைவருக்கும் நிவாரணம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11