ஜனாதிபதி பிலிப்பைன்ஸிற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்

Share Button

பிலிப்பீன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரோர்ட்ரிகோ டியுடேர்ட்டுக்கும் (சுழனசபைழ னுரவநசவந) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

பிலிப்பீன்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் நான்கு நாள் அரசமுறை விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று பிலிப்பீன்ஸ் பயணமானார்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இது தொடர்பான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் உறவுகள், பரஸ்பர நன்மையை நோக்கமாகக்கொண்டு புதிய உறவுகளை நோக்கி விரிவுபடுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் இதன்போது அரச தலைவர்கள் விசேட கவனம் செலுத்தவுள்ளனர்.

தனது இந்த விஜயத்தின் போது பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் லெஸ்பெனோஸ்கியிலுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி;, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தக்கஹிகோ நாகக்காகோவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2