இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயத்தில் இலங்கை பெற்றுள்ள முன்னேற்றத்தை பிரித்தானியா வரவேற்றுள்ளது

Share Button

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர லண்டன் நகரில் ஐக்;கிய இராஜ்யத்தின் பொதுநலவாய மற்றும் ஐக்கிய நாடுகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட்டை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் ஆகிய துறைகளின் முன்னேற்றங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றியும் அவர்கள் கலந்துரையாடினார்கள். தாரிக் அஹமட், பிரித்தானிய பிரதமரின் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் நிகழும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுத்தல், மதங்களை பின்பற்றுதல், சுதந்திரம் என்பன தொடர்பான விசேட பிரதிநிதியாகவும் பணியாற்றுகிறார்.

இதேவேளை, பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர, பிரத்தானியாவின் ஆசிய மற்றும் பொதுநலவாய அலுவலகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட்டை அண்மையில் சந்தித்து பேசியுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அரசியல், பொருளாதார துறைகள் பற்றிய நெருக்கடிகள் தொடர்பாகவும் அவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *