முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது

Share Button

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுவது அவசியமாகும். இது தொடர்பான மனுவை ஆராய்ந்ததன் பின்னர் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

கொழும்பு – மருதானை பிரதேசத்தில் கடந்த டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், உரையாற்றினார் என்று கூறி, பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர உட்பட மூன்று பேர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *