வெனிசுவேலாவில் அரசியல் நெருக்கடி – அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளையும் துண்டிப்பு

Share Button

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், வெனிசுவேலாவின் அரசியல் நெருக்கடி தீவிரம் பெற்றுள்ளது. அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் தாமே பதில் தலைவர் என்று பிரகடனம் செய்துள்ளார். இந்த 35 வயது மனிதரை தாம் வெனிசுவேலாவின் தலைவராக அங்கீகரித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுடனான சகல இராஜதந்திர உறவுகளையும் துண்டிப்பதாக ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ தெரிவித்தார். சமீபத்தில் இடம்பெற்ற தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் வாக்கு மோசடிகள் நடந்ததாக எதிர்கட்சி சாடுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *