அரசியல் அமைப்பு பேரவை மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது! பிரதமர்

Share Button

ஜனாதிபதி தலைவராக உள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியொன்றிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி உரித்தாக வேண்டும்.

அதற்கிணங்க, அரச தலைவர், தலைமை பதவி வகிக்கின்ற கட்சிக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுவிடயம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருக்குமாயின், புதிய அரசியல் அமைப்பு யோசனைகளில் அவற்றை உள்ளடக்க வேண்டும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இதுவிடயம் தொடர்பில் சிக்கல் இருப்பதனால், புதிய அரசியல் அமைப்பில் இத்தகைய பிரச்சினையை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளான டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரது காலங்களில் ஜனாதிபதியை சார்ந்த கட்சியின் உறுப்பினருக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதேவேளை, அரசியல் அமைப்பு பேரவை மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பேரவையில் பிரதமருக்கு ஐந்து உறுப்பினர்களை நியமிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அதேவேளை, எதிர்கட்சித் தலைவருக்கு ஐந்து பேரை நியமிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க அரசாங்கம் எந்தவித வேண்டுகோளையும் விடுக்கவில்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு வலியுறுத்தித் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க அரசாங்கம் எந்தவித வேண்டுகோளையும் விடுக்கவில்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு வலியுறுத்தித் தெரிவித்தார்.

இதுவிடயம் தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களுக்கு உரித்தான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு உரித்தான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டமை ஒரு அநீதியான செயல் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே, உரிய நிவாரணத்தை மீளவும் பெற்றுக் கொடுக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசும் வேளையிலேயே அமைச்சர் கிரியெல்ல இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11