இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்திற்கு திருத்தங்கள் முன் வைக்கப்படும்! ஜனாதிபதி

Share Button

சிங்கப்பூருக்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனாவுக்கும் சிங்கப்பூர் பிரதமர் Lee usien Loong க்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.

இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிற்துறை உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையே கைச்சாத்திடப்பட்டிருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அந்த ஒப்பந்தத்தை தயாரிக்கும்போது இலங்கை தரப்பில் ஒரு சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குறைபாடுகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிய வலயத்திற்கு மாத்திரமன்றி உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்; தலைமையின் கீழ் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களுக்காகவும் அந்நாட்டில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் நலன்புரி தேவைகளுக்காகவும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இதேநேரம் அஸ்டோனியாவின் சுற்றாடல் அமைச்சரும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் குழுவின் நான்காவது கூட்டத்தொடரின் தலைவரானSlim kiisler ரையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.

சுற்றாடலை பாதுகாப்பதுடன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர் பாராட்டைத் தெரிவித்தார்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நைரோபியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் கூட்டத்தொடரில் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொலித்தீன் பாவனைக்கு தடை விதித்து; சுற்றாடலை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் விரிவான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் சுற்றாடலை பாதுகாப்பதற்கு முப்படையினரின் பங்களிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி அவருக்கு விளக்கம் அளித்தார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *