சுவடிகள் திணைக்களத்தின் பிரதிகளை வெளிநாடுகளுக்கு வழங்கும் மோசடி!

Share Button

தேசிய சுவடிகூட திணைக்களத்திற்கு சொந்தமான பெறுமதியான ஆவணங்களின் பிரதிகள் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அறியாத நிலையில் பிரதிகள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

போதைப் பொருள் அற்ற நாடு என்ற வேலைத்திட்டத்தின் 13ஆவது மாவட்ட மீள் பரிசீலனைக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டம் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்களே போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஏளனப்படுத்துகிறார்கள்.

இதன் மூலம் சுய இலாபம் பெற முனைகிறார்கள் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இதில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதிஇ போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை அளிக்கப் போவதாக தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, இந்தியா முதலான நாடுகளில் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எல்ரிரிஈ பயங்கரவாதத்தை தோற்கடிக்கச் செய்ததைப் போன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் தோற்கடிக்கும் பொறுப்பை முப்படையினரிடமும் பொலிசாரிடமும் தாம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11