போதைப் பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய ஒத்துழைப்புக்களுக்கு இலங்கை – மாலைதீவு தலைவர்கள் இணக்கம்.

Share Button

போதைப் பொருளுக்கு எதிரான வேலைத்திட்டத்தை விரிவான ஒத்துழைப்புடன் மேற்கொள்ள இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலிஹ், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டது.

போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி முன்னெடுக்கும் விசேட வேலைத்திட்டத்தை மாலைதீவு ஜனாதிபதி பாராட்டி பேசியுள்ளார். வர்த்தகம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் இருதரப்புக்கும் இடையிலான கடல்சார் ஒப்பந்தங்களை புதுப்பிக்கவும், புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. சார்க் பிராந்தியத்தின் சுபீட்சத்திற்காக இணைந்து செயற்படுவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்தார்கள். ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்ற மாலைதீவு ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11