பால்மாக்களில் எண்ணெய் வகையோ, கிருமிகளோ இல்லை என சுகாதார அமைச்சு வலியுறுத்தல்

Share Button

குழந்தைப் பால்மா அடங்கலாக, சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பால்மா வகைகளின்சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை சுகாதார அமைச்சு ஏற்பதாக அதன் மேலதிகாரிஒருவர் தெரிவித்துள்ளார்.

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பால்மாக்களில் எதுவித எண்ணெய் வகையோ, நுண்ணுயிரோஇல்லை என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் உணவு ஆரோக்கிய பதில் பணிப்பாளர்டொக்டர் சப்புமல் தனபால தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்பால்மாக்கள் தருவிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையில் குறித்த நிறுவனங்களிடமிருந்துசுகாதார பாதுகாப்பு குறித்து முழுமையான அத்தாட்சி சான்றிதழ் பெறப்படுகிறது. இந்நாடுகளி;னநவீன இரசாயன ஆய்வுகூடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையிலும் தரநிர்ணய பரீட்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காலத்திற்கு காலம் மக்களை திசை திரும்பும்நோக்கில் இத்தகைய கருத்துக்களை பரப்பும் நபர்கள் பற்றிய சுகாதார அமைச்சு கவனம் செலுத்திவருவதாக டொக்டர் சப்புமல் தெரிவித்தார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-03 | 18:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,710
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 863
புதிய நோயாளிகள் - 27
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 66
நோயிலிருந்து தேறியோர் - 836
இறப்புக்கள் - 11