மாக்கந்துறே மதூஷை நாட்டுக்கு கொண்டுவருவதில் காணப்படும் சிக்கல் தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லா தெளிவுபடுத்தியுள்ளார்
மாக்கந்துறே மதூஷ் உள்ளிட்ட பாதள உலகக்குழுத் தலைவர்கள் தொடர்பில் ஊடகங்களில் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதனால், அவர்களை நாட்டுக்கு கொணடுவர முடியாதுள்ளதாக அமைச்;சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டி மாநகர சபையின் ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட மாவில்மட சனசமூக நிலையத்தின் திறப்பு விழாவின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஊடகங்கள் வாயிலாக அவர் தொடர்பில் பல்வேறு விடயஙகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் அவரை நாட்டுக்குள் கொண்டுவருவதிலம், அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.