மரம் தறிக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் அனைவரது தகவல்களும் மார்ச் மாதத்திற்கு முன்னர் பொலிஸாரிடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

Share Button

மரம் தறிக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் அனைவரது தகவல்களும் மார்ச் மாதத்திற்கு முன்னர் பொலிஸாரிடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மரம் தறிப்பவர்களை பதிவு செய்வது தொடர்பன விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி விதாரன தெரிவித்தார்.
காடழிப்பை தடுக்கும் நோக்கில் மரங்களைத் தறிப்பவர்கள் பல்வேறு வகையான சிறிய மற்றும் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்துபவர்கள்.
அவர்கள், மார்ச் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கு தம்மிடம் இருக்கும் உபகரணங்கள் குறித்து அறிவிக்க வேண்டும்.
அத்துடன், மார்ச் மாதம் அதற்கென அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசேட சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *