இங்கிலாந்து வீரரை பாலியல் ரீதியாக விமர்சித்த மேற்கிந்திய வீரர் ஷெனன் கெப்ரியலுக்கு இடைக்கால தடை

Share Button

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெனன் கெப்ரியல் மீது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் நான்கு போட்டிகளில் விளையாட முடியாதவாறு தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது. செயின்ட் லூஸியாஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீது பாலியல் ரீதியான அவதூறு கருத்துக்களைக் கூறியதாக கெப்ரியல் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றத்தை ஏற்றுக் கொண்டதால், போட்டிக்கான கட்டணத்தில் 75 சதவீதத்தை அபராதமாக செலுத்தவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட்டை ஒரு பாலின செயற்கையாளர் என ஷெனன் கெப்ரியல் விமர்சித்ததாக தெரிகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *