ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்

Share Button

ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டில் பாரிய அபிவிருத்திகளை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ தேர்தல் தொகுதியில் பல கிராமிய வீதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த நிகழ்வில் அவர் உரையாற்றினார். சமீபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் நாட்டுக்கு அளப்பரிய சேவையை ஆற்றிய கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாகும். இதற்கமைவாக தற்பொழுது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு தெரிவான தற்போதைய அரசாங்கம் நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. ஒரு வகுப்பினரின் நலனை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது அனைத்து மக்களினதும் நலன்களுக்கும் சமகால அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாமல் போன எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் முறைகேடாக அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்ததாகவும் அவர் கூறினார். பொதுமக்களுடன் ஒன்றிணைந்து சட்டரீதியில் செயற்பட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *