சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது

Share Button

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் நிதியமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நிதியமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படவுள்ள அடுத்த கட்ட கடன் தொகை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்தனர். சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு நான்கு கட்டங்களாக கடன் உதவி வழங்கப்பட்டன. ஐந்தாவது கட்டக் கடன் கடந்த நவம்பர் மாதம் வழங்கப்படவிருந்தது. எனினும் அப்போது இலங்கையில் நிலவிய அரசியல் குழப்ப நிலை காரணமாக அந்த நிதி வழங்கல் பிற்போடப்பட்மை குறி;ப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *