இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார் என பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளா

Share Button

இந்தியா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமானால், பாகிஸ்தான் அதற்கான பதிலடியை வழங்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த 14ஆம் திகதி இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலினால் 40க்கும் மேற்பட்ட இந்திய துணைப் படையினர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்துமாறு இம்ரான் கான் இந்தியாவிடம் கேட்டுள்ளார். அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சி உரையின் போதே பாகிஸ்தான் பிரதமர் இதனைத் தெரிவித்தார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜாஇஸ் இ மொஹம்மட் என்ற கிளர்ச்சிக் குழு தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *