பதற்ற நிலையை தணிக்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்தியாவிடமும், பாகிஸ்தானிடமும் கோரிக்கை.

Share Button

தமக்கிடையிலான முறுகல் நிலையை தணிப்பதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 14ஆம் திகதி இந்திய காஷ்மீரில் படைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து தோன்றியுள்ள நிலைமை பற்றி செயலாளர் நாயகம் கருத்து வெளியிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் 42 படைவீரர்கள் பலியானார்கள். இதற்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட கடும்போக்கு அமைப்பொன்று உரிமை கோரியது. தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை தண்டிப்பதற்கு படையினர் சுதந்திரமாக செயற்படலாம் என இந்திய பிரதமர் அறிவித்திருந்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *