இந்திய வான்படையினர் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் – பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் அவசர சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்

Share Button

இந்திய விமானப்படை, பாகிஸ்தான் நிலப்பரப்பில் ஊடுருவி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சில் இடம்பெறுகிறது.

பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அத்துமீறிய இந்திய விமானப் படையினர் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இலக்குகள் எனக் கருதப்படும் பகுதிகளில் தமது நாட்டு இராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன் போது, பயங்கரவாதிகளின் பல முகாம்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே, பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகள் தற்சமயம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புல்வாமா தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *