தடுத்து வைத்துள்ள இந்திய விமானியை விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அறிவிப்பு
தமது படைகள் தடுத்து வைத்துள்ள இந்திய விமானியை விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அவர் பாராளுமன்றத்தில் இந்தத் தகவலை அறிவித்தார்.
சமாதானத்தை உருவாக்கும் நல்லெண்ண நோக்குடன் இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி விங் கொமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதென தீர்மானித்ததாக இம்ரான் கான் குறிப்பிட்டார். இந்த அறிவித்தலை பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் சந்தோஷத்துடன் வரவேற்றுள்ளார்கள்.
விங் கொமாண்டர் அபிநந்தன் இந்திய விமான படைக்கு சொந்தமான மிக் விமானத்தை பாகிஸ்தானிய வான் பரப்புக்குள் செலுத்திய சமயம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானிய படை வீரர்கள் அபிநந்தனை தடுத்து வைத்திருந்தார்கள்.