இந்திய, பாகிஸ்தான் பதற்ற நிலையை தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளில் சீனா அக்கறை.

Share Button

காஷ்மீரின் புலவாமா பிரதேச தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நீடிக்கும் பதற்ற நிலையை தணிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யு பாகிஸ்தான் சென்றுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். பாகிஸ்தான் அரசாங்கம் ஏனைய தரப்புக்களுடன் ஒத்துழைத்து நடக்க வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாக்குவது விஜயத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார். இந்த இராஜதந்திரி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க பாடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *