படையினர் வசமுள்ள மேலும் பல காணிகளை துரிதமாக விடுவிக்க நடவடிக்கை.

Share Button

வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த மேலும் பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மயிலிட்டி வடக்கிலும், கிழக்கிலும், அதன் அண்டிய பகுதிகளிலும் சுமார் 20 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைய, காணிகள் விடுவிக்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்ச்சி தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இதற்குரிய ஆவணங்களை யாழ் மாவட்ட செயலாளர் என் வேதநாயகனிடம் கையளித்தார்.

அதேவேளை, மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி நேற்று வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவனை சந்தித்தார். இதன் போது, வடக்கின் பாதுகாப்பு நிலவரம் பற்றியும், யாழ்ப்பாணத்தில் படையினர் முன்னெடுக்கும் நல்லிணக்க நடைமுறைகள் பற்றியும் அவர் விளக்கம் அளித்ததாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு அமைய, வடக்கில் பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்தார்,

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *