அரசியல் யாப்பு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஜேவிபியுடன் நடத்திய பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவு.

Share Button

அரசியல் யாப்பை திருத்தி அமைப்பது பற்றி எதிர்கட்சித் தலைவரும், மக்கள் விடுதலை முன்னணியும் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தீர்வுகள் இன்றி முடிவடைந்துள்ளது.

இதுபற்றி கருத்து வெளியிட்ட ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நேற்றைய பேச்சுவார்த்தையில் நிறைவேற்று அதிகார முறையையும், தேர்தல் முறையையும் மாற்றி அமைப்பது பற்றி பேசப்பட்டதாக தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும கருத்து வெளியிடுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாத்திரம் தனியாக இல்லாதொழிக்க முடியாதென குறிப்பிட்டார். தேர்தல் முறையையும் சேர்த்தே மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *