நாட்டு மக்களை வலுப்டுத்தும் நோக்கில் இம்முறை வரவு செலவுத் திட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்;பினர்கள் தெரிவித்துள்ளனர்

Share Button

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்காக பல நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறி;ப்பிட்டார்.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு அனுகூலங்கள் பலவற்றை வழங்கும் வகையில் இந்த வரவு செலவுத்திட்டத்தை முன் வைத்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிஹார தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார். தோட்டத் தொழிலாhள்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுக்காக இந்த முறை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய கொள்கைகளுடன் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தெரிவித்தார்.

ஐந்தாம் புலமைப்பரிசில் மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக பசும்பால் வழங்குவது தொடர்பில் எதிர்ப்பில்லையென விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.முத்துக்குமார தெரிவித்தார்.

அரச பணியாளர்களது வேதன அதிகரிப்பு மகிழ்ச்சி அளி;பபதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் பிரேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வருமானமாக எதிர்பார்த்துள்ள 365 பில்லியன் ரூபாவின் ஊடாக பொதுமக்களை வரிச் சுமையில் இருந்து மீட்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2