கொழும்பு இலகு ரெயில் திட்;டத்திற்கு ஜப்பான் உதவி

Share Button

கொழும்பு இலகு ரெயில் திட்டத்திற்கு ஜப்பான் உதவி செய்கிறது. இந்தத் திட்டத்திற்காக 48 பில்லியன் ரூபாவை நிவாரணக் கடனாக வழங்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கமும் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவனமும் கைச்சாத்திட்டன. மாலபே நகரையும், கொழும்பு கோட்டையையும் இணைக்கும் வகையில் இலகு ரெயில் வலைப்பின்னல் ஸ்தாபிக்கப்படும். கொழும்பு நகரில் நிலவும் சன நெரிசலைக் குறைத்து, பயணிகள் இலகுவாக முக்கிய இடங்களுக்கு பயணிக்க வழிவகுப்பது திட்டத்தின் நோக்கமாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *