தெற்காசிய மகளிர் காற்பந்தாட்ட வெற்றிக் கிண்ண சுற்றுத்தொடர் இன்று ஆரம்பம்

Share Button

இவ்வாண்டிற்குரிய தெற்காசிய மகளிர் வெற்றிக்கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை மகளிர் அணி நேபாளத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுத்தொடர் இன்று தொடக்கம் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நேபாளத்தில் நடைபெறும். இலங்கை பீ குழுவில் இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுடன் போட்டியிடுகிறது. இலங்கை மகளிர் அணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலைதீவு மகளிர் அணியையும் ஞாயிற்றுக்கிழமை இந்திய மகளிர் அணியையும் சந்திக்கும். இலங்கை அணியில் முப்படைகளைச் சேர்ந்த பெண் போட்டியாளர்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *