வங்குரோத்து அரசியலை கைவிட்டு நாட்டை முன்னேற்ற ஒன்றிணையுமாறு பிரதமர் இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share Button

தலவாக்கலை – லிந்துல நகர சபையின் தலைவர் அசோக்க சேபால ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பாராளுமன்றத்தில் வைத்து கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார்.

சுயேட்சைக் குழுவாக செயற்பட்ட நகர சபை தற்சமயம் ஐக்கிய தேசியக் கட்சி வசமாகியிருக்கிறது. வங்குரோத்து அரசியலை கைவிட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய ஒன்றிணையுமாறு இளைஞர் சமூகத்திடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை அரசாங்கம் பொறுப்பேற்றதாகவும். இவ்வாறான நாடொன்றை எதிர்கால சந்ததியினருக்காக ஒப்படைக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இளைஞர்களுக்கு கைகொடுக்கும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை குறிப்பிட முடியும் என்று லி;ந்துல நகர சபையின் தலைவர் அசோக்க சேபால இதன் போது தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11