சவாலுக்கு மத்தியிலும் அரசாங்கம் சிறந்த வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் தெரிவித்துள்ளார்
இம்முறை வரவு செலவுத்திட்டம் மக்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த வரவு செலவுத்திட்டமாகும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்காகவும், மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காகவும் நிதி அமைச்சர் சிறந்த வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். வரவு செலவுத்தி;ட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரவு செலவுத் திட்டத்தை 11 தடவைகள் தாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல், இவ்வாறான வரவு செலவுத்திட்டங்களை எதிர்காலத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிப்பார் எனின், தமது சாதனையை சமப்படுத்த முடியும் என்றும் கூறினார்.