வரவு செலவுத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Share Button

இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறை மீதும், விவசாயிகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் 27 சதவீதமானோர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

கடந்த காலங்களில் மருந்து வகைகளை உற்பத்தி செய்யும் பல்தேசிய கம்பனிகள் மக்களை கூடுதலாக சுரண்டியதாகவும் அவர் குறிப்பி;ட்டார். 100 ரூபாவாக இருந்த மருந்து வகைகள் இன்று பத்து ரூபா வரை குறைக்கப்பட்டிருக்கின்றன. புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென 15 லட்சம் ரூபா மாத்திரமே கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச விலைக்கு அமைவாகவே எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்கம் சீர்குலையும் நாடொன்றில் நிதி முகாமைத்துவம் என்பது சிரமமான விடயமாகும். இதனால், பாடசாலை காலம் முதல் மாணவர்களுக்கு மத்தியி;ல் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என்றும் இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன வலியுறுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11