சுயாதீன ஆணைக்குழுக்களினால் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

Share Button

பாராளுமன்றம் சக்தி வாய்ந்த நிறுவனமாக மாறியிருக்கிறதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் ஆணைக்கு அமைவாக பாராளுமன்றம் செயற்படுகிறது. வாக்காளர்களுக்கு மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும். உயர் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். வரவு செலவுத்தி;ட்டத்தின் குழுநிலை விவாதத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், மீயுயர் நீதிமன்றங்கள், அமைச்சரவை, பாராளுமன்றம், தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு உட்பட 25 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி இன்று விவாதிக்கப்படுகிறது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளின் யோசனை நாட்டுக்கு எதிரானது அல்ல என்று குழுநிலை விவாதத்தில் இணைந்து கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாட்டுக்கு எதிரான யோசனையாக இதனை எடுத்துக் காட்ட சிலர் முயன்று வருகிறார்கள். இந்த யோசனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம்; கிடையாது. இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயின், நாடு பின்நோக்கித் தள்ளப்படும் என்று அமைச்சர் கிரியெல்ல கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *