பண்டிகைக் காலத்தை கருத்திற் கொண்டு முழுமையான விலையேற்றத்தை மக்கள் மீது சுமத்தப் போவதில்லை என நிதி அமைச்சர் அறிவிப்பு.

Share Button

பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, முழுமையான எரிபொருள் விலையேற்றத்தை மக்கள் மீது சுமத்தப் போவதில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றம் கண்டாலும், அரசாங்கம் தலையீடு செய்து மக்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்குமென அமைச்சர் கூறினார். அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.

இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் எரிபொருள் விலை நாளாந்த அடிப்படையில் அதிகரிக்கப்படுகிறது. இலங்கையில் எரிபொருள் விலைச் சூத்திரத்தை இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். உலக சந்தையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது கடந்த டிசெம்பரில் 54 டொலரை எட்டியிருந்தது. இன்று 30 சதவீத அதிகரிப்புடன் 70 டொலரை தாண்டியிருப்பதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *