இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துறசிங்க தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பியழைப்பதெனத் தீர்மானம்

Share Button

இலங்கை கிரிக்கட் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பி அழைக்கப்படுகிறார். சமகால ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடரின் ஐந்தாவது போட்டி முடிவடைந்ததும் ஹத்துருசிங்க நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஐசீசீ உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலுக்காக அவர் திருப்பி அழைக்கப்படுகிறார் என நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ரீ-ட்வென்ரி சர்வதேச போட்டிகளில் ஸ்ரீவ் ரிக்ஸன் பதில் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றுவார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *