கல்வித்துறை அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் பாராட்டப்பட்டுள்ளது

Share Button

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கெர்ணடமை தொடர்பில் தாம் நன்றியை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இந்துசமய ஆலோசனைச் சபைக்கு இந்து சமயம் தொடர்பான புலமை பெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் 445 தொண்டர் ஆசிரியர்கள் சேவையாற்;றி வருவதாகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென்றும் யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்மொழி ஆசிரியர்களின் பற்றாக்குறைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் நஸீர் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்தில் பாடசாலை மற்றும் நகர அபிவிருத்தியின் பொருட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டினார். தற்போது அனேகமான சிறுவர்கள் காலையில் பாடசாலைக் கல்வியையும், மாலையில் மேலதிக வகுப்புகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு விளையாட்டு போன்ற மேலதிக வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் போவதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது மாற்றப்பட வேண்டும். பாடசாலைகளில் இதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். வடமாகாணத்தின் வலயக் கல்விக் காரியாலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

 

கல்வித்துறையை புதிய பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அரசாங்கத்திற்க முடிந்திருப்பதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார். மனித வளத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த கல்வி முறை அவசியமானதாகவும், அதற்கு அடித்தளம் இடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11