இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த சோமாலிய மீனவர்கள் மீட்பு

Share Button

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த சோமாலிய மீன்பிடி கப்பலில் இருந்து நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

காலி துறைமுகத்தில் இருந்து 112 கடல் மைல் தொலைவில் சோமாலிய மீன்பிடி கப்பல் விபத்துக்கு உள்ளானது. இதிலிருந்து மீனவர்களை இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகிலிருந்து மீனவர் குழுவொன்று காப்பாற்றி கடற்படையின் தெற்கு கட்டளை தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளது.

இதன் பிரகாரம் நந்திமித்திர என்ற கப்பலின் மூலம் சோமாலிய மீனவர்களை கரைக்கு அழைத்து வந்ததாக கடற்படை அறிவித்தது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *