பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோ நான்கு வழக்குகளிலிருந்து விடுதலை

Share Button

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது. இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவராக செயற்பட்டு, 39 லட்சம் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தினார் என்பது அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

இதேவேளை, சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை சரியாக சமர்ப்பிக்காமையினால், ஜொன்ஸன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளையும் மீண்டும் வாபஸ் பெறுவதற்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்ததைத் தொடர்ந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை வழங்கியது. வழக்குகளில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களை கருத்திற் கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதாக ஆணைக்குழு இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *