மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு;ள்ளது

Share Button

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக துறைசார் பூர்வாங்கஅறிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதைகுழியின் அகழ்வுநடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக மன்னார் நீதிமன்ற வைத்தியஅதிகாரி டொக்டர் சமிந்த ராஜபக்ஷ எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

மன்னார் நீதவான் தலைமையில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின்போது இந்தத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. புதை குழியைப் பாதுகாத்தல், போதிய பொலிஸ் பாதுகாப்பைவழங்குதல் உட்பட பல விடயங்கள் பற்றியும் இதன் போது ஆராயப்பட்டன. காணாமற்போனோர்அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், களனிப் பல்கலைக்கழகத்தின்தொல்பொருள் துறையின் தலைவர் பேராசிரியர் ராஜ் சோமதேவ உட்பட சட்டத்தரணிகளும்விசாரணையுடன் தொடர்புடையவர்களும் இதில் கலந்துகொண்டார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-04 | 19:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,790
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 940
புதிய நோயாளிகள் - 41
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 56
நோயிலிருந்து தேறியோர் - 839
இறப்புக்கள் - 11