நெல் கொள்வனவு நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக கொள்வனவு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்

Share Button

நெல் கொள்வனவு நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக நெல் கொள்வனவு சபையின் தலைவர் கஸ்;தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். நெல்கொள்வனவு சபையின் சகல களஞ்சியசாலைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. களஞ்சியாலை வசதியற்ற பிரதேசங்களை இனம் கண்டு, லொறிகன் மூலம் நெல்லை கொள்னவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவாகவும், நாடு ஒரு கிலோ 31 ரூபாவாகவும் அரசாங்கம் விலை நிர்ணயித்துள்ளது. அந்த விலைக்கு நெல் கொள்வனவு சபை விவசாகளிடம் இருந்து கொள்வனவு செய்கின்றது. குறித்த நிர்ணய விலையை விட குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தடுக்குமாறு தலைவர் விவசாயிகளை கேட்டுக் கொண்ட்டு;ளளார்;. தமிழ், சிங்கள புத்தாண்டுககான இரு தினங்கள் மற்றும் ஞாயிறு தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் மே மாதம் வரையில் நெல் கொள்வனவு இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை வரை 25 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11