அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எதனையும் மேற்கொள்ள தயாரில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share Button

அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எதனையும் மேற்கொள்ள தயாரில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்திய காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படவில்லையெனவும், அது தொடர்பில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு அரசசார்பற்ற நிறுவனங்களின் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். களுத்துறை மீஹாதென்ன பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உண்;மையான விடயங்களை அனுமதிப்பதாக குறிப்பிட்ட அவர் உண்மைக்குப் புறம்பான விடயங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயார் இல்லையென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11