துன்புறுத்தல்களை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளுக்கான குழு நாளை இலங்கை வரவுள்ளது.

Share Button

துன்புறுத்தல்களை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைக்குழுவின் உறுப்பினர்கள் நாளை இலங்கை வரவிருக்கிறார்கள். முதற்தடவையாக இலங்கை வரவிருக்கும் குழுவினர் உறுப்பினர்கள் எதிர்வரும் 12ம் திகதி நாட்டில் தங்கியிருப்பார்கள்.

தடுத்து வைக்கப்பட்டவர்களை துன்புறுத்தல்கள், முறையற்ற கவனிப்பு என்பனவற்றிலிருந்து பாதுகாப்பது இதன் நோக்கமாகும். நான்கு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு, அமைச்சுகளுடனும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இலங்கையின் சிவில் அமைப்புக்களையும் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைக்குழு சந்திக்கவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *