யாழ்ப்பாணத்தில் மேலும் 400 ஏக்கர் காணியை விடுவிக்கும் திட்டங்கள்

Share Button

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள 400 ஏக்கர் காணியை விரைவில் படையினர் விடுவிப்பார்கள் என வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வலிகாமம் வடக்கிற்கு விஜயம் செய்து, நிலமைகளை நேரில் கண்டறிந்த பின்னர் ஆளுனர் கருத்து வெளியிட்டார். காணிகளை விடுவிப்பதன் மூலம் யாழ்;ப்பாண மக்களின் வாழ்வில் இயல்பு நிலை திரும்புவதுடன், விவசாயிகள் ஜீவனோபாய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உருவாவதாக அவர் கூறினார்.

வடக்கு ஆளுனர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கும் ஆரோக்கிய மாதா கிறிஸ்தவ தேவாலயத்திற்கும் விஜயம் செய்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *