குப்பை கூழங்களை அகற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்
குப்பை கூழங்களை அகற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் பதில் உரை வழங்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். குப்பை கூழங்களை அகற்றுவதற்கு சட்ட ரீதியான அதிகாரம் மாகாண சபைகளுக்கு இருக்கின்றது. அதற்குத் தேவையான வாகனம் உள்ளிட்ட இயந்திரங்கள் மாகாண சபைகளிடம் இல்லாதது பெரும் பிரச்சினையாகும்.
குப்பை கூழங்களை நீக்குவதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதும் இதற்குப் பாதகமாக உள்ளது. நிபுணர்களின் திட்டம் தொடர்பில் பொதுமக்கள் போதிய அறிவைக் கொண்டிருக்காமையே இதற்கான காரணம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.