வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவிருக்கிறது
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சிக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய விவாதம் இன்று இடம்பெறுகிறது.
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட ஆர் சம்பந்தன் வலியுறுத்தினார். நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பை அறிமுகம் செய்வது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.
பொருளாதாரத்தை புதிய திசையில் எடுத்துச் செல்ல இம்முறை வரவு செலவுத்திட்டம் உதவியிருப்பாதாக இராஜாங்க அமைச்சர் சம்பிக்கா பிரேமதாஸ கூறினார்.
என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன் திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராட்டி பேசினார்.