சதொஸ நிறுவனம் இன்று முதல் 200 பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது

Share Button

சதொஸ நிறுவனம் இன்று முதல் 200 வகையான பொருட்களின் விலைகளை குறைந்த விலையில் விற்பனை செய்யத் தீர்மானித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது இதன் நோக்கமாகும் என்று சதொஸ நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதி முகாமையாளர் ரொஷான் எஸ் ஹஸன் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ பருப்பின் விலை 110 ரூபா வரை குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ சம்பா அரிசி 84 ரூபாவுக்கும். ஒரு கிலோ சிவப்பரிசி 57 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ சீனியை 97 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும். ஒரு கிலோ நெத்தலி 669 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 75 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதோடு, ரின் மீனின் விலை 195 ரூபாவாகும். நாடு பூராகவும் உள்ள சதொஸ நிறுவனங்களின் ஊடாக குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *