குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட பதவிய சிறிபுர கொலொன்கொல்ல குளம் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிப்பு

Share Button

சிறிசர பிவிசும என்ற திட்டத்தில் 500 குளங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட பதவிய சிறிபுர கொலொன்கொல்ல குளத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்டது. மஹா சங்கத்தினரின் செத்பிரித் நிகழ்வுடன் ஜனாதிபதி இது தொடர்பான பெயர் படிகத்தை திரைநீக்கம் செய்து வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து குளத்தில் மீன் குஞ்சுகள் ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டன. ஆதிவாசிகள் தமது பாரம்பரியத்திற்கு அமைவாக கிரிகொரஹா என்ற பாடலை இசைத்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆதிவாசி மக்களின் தலைவர் வன்னிலஎத்தன், இராணுவத் தளபதி மற்றும் வன்னி கட்டளைத் தளபதி ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக இலங்கை இராணுவத்தினரால் இந்தக் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

இதேவேளை, சிறிசர அவுருது பனஅரணக்க அவுருது உதாவ என்ற நிகழ்வு இன்றைய தினம் கொலன்னாவ குளப் பகுதியில் நடைபெற்றது. ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்து கொண்டார். விளையாட்டுக்கள், புத்தாண்டு சம்பிரதாயங்கள் மற்றும் கலாசாரங்கள் உள்ளடங்கிய நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றன. இராணுவத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

மரதனோட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கினார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுவத்தா அங்கத்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு வைபவத்தில் ஜனாதிபதி இன்று காலை கலந்து கொண்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11