சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், ஆட்கடத்தல் என்பனவற்றை தடுக்க இலங்கையும் இந்தியாவும் இணக்கம்.

Share Button

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான ஒரு புதிய கூட்டு முயற்சி தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்செய் மித்திராவுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது.

பிராந்திய பாதுகாப்புக்கென சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தையும் ஆட்கடத்தலை தடுப்பதற்காக இரண்டு நாடுகளும் புரிந்துணர்வோடு இணக்கப்பாட்டுடனும் செயற்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் பயிற்சிகள் பற்றி ஜனாதிபதி இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

பொருளாதார செயற்பாடுகளில் இரண்டு நாடுகளும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *